

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் புதிய கிளை சென்னை போரூரில் நேற்று திறக்கப்பட்டது.
முன்னணி கண் சிகிச்சை மருத்துவமனைகளில் ஒன்றாக டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனை திகழ்ந்து வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சென்னையில் மட்டுமே 14 கிளைகள் உள்ளன. இது தவிர தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலும் இந்த மருத்துவ மனை உள்ளது.
இந்நிலையில், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை யின் புதிய கிளை சென்னை போரூரில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத் துவமனை, நவீன அறுவை சிகிச்சைக்கூடம், உள்ளிட்ட நவீன வசதிகளுடன் சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவ மனையை நடிகர் விவேக் திறந்து வைத்தார். அப்போது மருத்துவமனையின் சிறப்பம்சங் கள் குறித்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனரு மான டாக்டர் அமர் அகர்வால் சிறப்புரையாற்றினார்.