

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மினி வேன் மீது லாரி மோதியதில் 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த தம்பை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் செல்லமுத்து. இவரது குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்து விழா நடத்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழச்செருவாய் கொடுமுடி அய்யனார் கோயிலுக்கு நேற்று வந்தனர். இரண்டு மினி வேனில் உறவினர்களுடன் வந்துவிட்டு விழா முடிந்ததும் நேற்று பிற்பகலில் மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
திட்டக்குடி-ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் இடைச்செரு வாய் பகுதியில் மினி வேன் சென்ற போது எதிரே வந்த லாரி மோதியது. இதில் மினி வேனில் பயணம் செய்த தம்பை கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் ராஜன் மனைவி அன்னக்கிளி(45) சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், விபத்தில் பலத்த காயம் அடைந்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சக்திவேல் மனைவி கல்பனா(31), சின்னசாமி மனைவி மின்னல் கொடி(45), நெடுவாசல் கிராமத் தைச் சேர்ந்த அம்மாசி மனைவி தெய்வானை(60) ஆகியோரும் இறந்தனர். விபத்தில் படுகாய மடைந்த துளசி, பாப்பாத்தி, கீர்த்திவாசன், சக்திவேல், யுவராணி, பெரம்பலூர் சங்குப் பேட்டையைச் சேர்ந்த ஞானசேகர் மனைவி பவுனாம்பாள், கெங்கை வள்ளி, வசந்தி, சக்தி வேல், அவரது மகள் கவுசிகா ஆகி யோர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
விபத்து குறித்து திட்டக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.