Published : 30 Apr 2015 09:50 AM
Last Updated : 30 Apr 2015 09:50 AM

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 1800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அரசு போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 1800 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படவுள்ளன.

இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் நேற்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

திருவண்ணாமலை அருணாச் சலேஸ்வரர் திருக்கோயிலின் சித்ரா பவுர்ணமி கிரிவலம் வரும் 3-ம் தேதி காலை தொடங்கி 4-ம் தேதி காலை முடிவடைகிறது. இதற்காக திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் திருவண்ணாமலைக்கு மொத்தம் 1,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதாவது, வரும் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரு வண்ணாமலைக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

திருவண்ணாமலையில் உள்ள நிரந்தர பேருந்து நிலையங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலை யங்களிலிருந்து பொது மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக பல்வேறு நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட்டுள் ளன.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

சென்னையிலிருந்து..

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் சித்ரா பவுர்ணமி விழாவுக்கு செல்வார்கள். எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 500 சிறப்பு பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து சுமார் 150 சிறப்பு பேருந்து களும் இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி கிடையாது. மக்கள் கூட்டம் வர, வர பேருந்துகள் வரிசையாக இயக்கப்படும் ஒரே நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், டோக்கன் வழங்கப்பட்டு பேருந்து களில் ஏற்றுச்செல்லப்படு வார்கள்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x