

சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர் ஆகிய ஆந்திராவின் முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் 50 இரவு நேரப் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
செம்மரக்கட்டைகள் வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 தமிழர்கள் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டு, துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
துப்பாக்கி சூடு நடந்ததால் மனித உரிமை மீறல் இருக்குமா? என்ற சந்தேகம் வலுக்கிறது.
இந்நிலையில், பதற்ற நிலையைத் தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர் ஆகிய பகுதிகளுக்கு இரவு நேரங்களில் இயக்கப்படும் 50 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.