

ஓசூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரை பரிசோதிக் காமல் இறந்து விட்டதாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கடிதம் அளித்துள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனை மருத்துவர் பரிசோதிக்காமல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு இளைஞரை அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா. இவரது மகன்கள் திம்மப்பா (25), மனோஜ் (17). நேற்று முன் தினம் இருவரும் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப, ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி பெட்ரோல் பங்குக்குச் சென்றனர். அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.
இதில் திம்மப்பாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் திம்மப்பாவை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர். பின்னர், பெங்களூரில் உள்ள விபத்து சிறப்பு சிகிச்சையளிக் கும் மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந் நிலையில் நள்ளிரவில் திம்மப்பா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் உறவினர்கள் திம்மப்பா உயிரிழந்தவிட்டதாக புரிந்து கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு நேற்று காலை 8.30 மணியளவில் கொண்டு வந்தனர்.
பிரேத பரிசோதனை செய்வதற்காக போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீஸாரிடம் அனுமதி கடிதம் கேட்டு மனு அளித்தனர். திம்மப்பா இறந்ததாக போலீஸார் கடிதம் அளித்தனர்.
தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு திம்மப்பாவை கொண்டு சென்றனர்.
காலை 10.30 மணிக்கு பிறகு ஆம்புலன்ஸில் இருந்து திம்மப்பாவை இறக்கி, பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவருக்கு உயிர் இருப்பதை அறிந்த தலைமைக் காவலர் ஒருவர், மருத்துவர்கள் மற்றும் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் திம்மப்பா அனுமதிக்கப்பட் டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மீண்டும் பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் திம்மப்பா உயிரிழந்தார்.
விரிவான விசாரணை
இதுகுறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் தமிழரசனிடம் கேட்டபோது, “ஓசூரில் நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, போலீஸார் திம்மப் பாவை நேரில் பார்க்காமல் பிரேத பரிசோதனை செய்ய அனுமதி கடிதம் வழங்கி உள்ளனர்.
அதை பெற்ற மருத்துவரும், திம்மப்பாவை பரிசோதிக்கமால் பிரேத பரி சோதனை அறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவத்ததில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக திம்மப்பா உயிருக்கு பேராடியுள்ளார்.
இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.