

மத்திய ரிசர்வ் வங்கி விவசாயிகளுக்கு அறிவித்துள்ள பயிர்க் கடன் வட்டி சலுகையை நிரந்தரமாக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
“மத்திய ரிசர்வ் வங்கி 2015-16-ம் ஆண்டுக்கான சிறப்பு விவசாய கடன் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு கடன் சலுகையில் 7% வட்டியில் கடன் வாங்கும் விவசாயிகள் குறித்த காலத் தில் தொகையை கட்டி முடித்தால், விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் 7% வட்டியில் 4% வட்டி மட்டும் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த சலுகையை ஜூன் மாதம் வரை மட்டும் நீட்டித்துள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த சலுகையை நிரந்தரமாக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி விவசாயிகளின் கடனுக் கான வட்டியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்”