

சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான புலன் விசார ணையை தேசிய புலனாய்வு அமைப் புக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் எம்.துரைசெல்வன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மே 1-ம் தேதி காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத் தப்பட்டிருந்த பெங்களூர் குவாஹாட்டி விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் சுவாதி என்ற மென்பொருள் நிறுவன பொறியாளர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிகுண்டு சம்பவம் இந்தி யாவின் தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் விடப்பட்டுள்ள மிகப் பெரும் சவால். இந்த வெடி குண்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் அடை யாளம் கண்டு, அவர்களை கைது செய்ய வேண்டும்.
பயணிகளின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்த ரயில்வே துறை அதிகாரிகள் தவறி விட்டனர். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுக்கும் பயணி கள், முன்பதிவு செய்த பயணிக ளுக்கான பெட்டிகளில் பயணம் செய்ய பல நேரங்களில் அனுமதிக்கப் படுகின்றனர். அங்கீகரிக்கப்படாத வியாபாரிகளை ரயில் பெட்டிகளில் வியாபாரம் செய்வதற்கு ரயில்வே பாது காப்பு படை போலீஸார் அனுமதிக் கின்றனர்.
மேலும், சென்ட்ரல் ரயில் நிலை யத்துக்குள் நுழையவும், வெளியே செல்லவும் பல வழிகள் உள்ளன. இதுபோன்ற பல பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. விமான நிலையங்களில் உள்ளது போன்று ஒரே நுழைவு வாயில், ஒரே வெளி யேறும் பாதை என்ற வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அண்மைக் காலத்தில் மாநில உளவுத் துறை என்பது மிகவும் திறமை யிழந்து செயல்படுகிறது. அதேபோல் தற்போது இந்த வழக்கின் புலன் விசார ணையை மேற்கொண்டுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸாரும் பல முக்கியமான வழக்குகளில் உண்மைகளைக் கண்டறியவில்லை.
இந்நிலையில் தேச முக்கியத்துவம் வாய்ந்த சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஆகவே, தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. வசம் உள்ள இந்த வழக்கின் புலன் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மென்பொருள் பொறியாளர் சுவாதியின் குடும்பத் துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவானது. சுவாதியின் உயிரிழப்புக்கு ரயில்வே துறைதான் பொறுப்பு ஆகும். ஆகவே, அவரது குடும்பத்துக்கு குறைந்த பட்சம் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கு மாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று துரைசெல்வன் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தின் விடு முறை கால அமர்வில் விரைவில் விசார ணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.