

தஞ்சை பெருவுடையார் கோயில் தேர் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மேல வீதியில் ரூ.37 லட்சம் மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெரிய கோயில் தேரை தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் காமராஜ் கூறும்போது, “100 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.37 லட்சம் மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெரிய கோயில் தேர் வெள்ளோட்டம் 20-ம் தேதி (இன்று) காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது. வரும் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறும்” என்றார்.