

முதுகுதண்டில் செய்யப்பட்ட சிகிச்சையின்போது வைக்கப்பட்ட பிளேட் வெளியே வந்து விட்டதால் அவதிப்படும் இளைஞர் தனது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டு முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத் தைச் சேர்ந்த அ.விக்னேஷ்வரன் (21) என்ற இளைஞர் வெல்டிங் கடையில் வேலை செய்து வந் தார். 2013-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது இரும்பு கம்பிகள் அவர் மீது விழுந்து முதுகு எலும்பு உடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவர் முதலில் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி முதுகு தண்டில் பிளேட் வைத்து சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், தற்போது அந்த பிளேட் வெளியே வந்து விட்டதால் அவர் மிகவும் அவதிப்படுகிறார்.
முதல்வர் தனிப்பிரிவில் அவர் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:
எனது தந்தை இறந்து விட்டார். என் தாயார் மிகவும் வயதானவர். எனவே எனது வருமானத்தை நம்பித்தான் என் அம்மாவும், என் தம்பியும் இருந்து வருகின்றனர்.
கடும் அவதி
பிளேட் வெளியே வந்துள்ளதால் உட்காரவோ, படுக்கவோ, நிற்கவோ முடியவில்லை. பணம் இல்லாத தால் மேல் சிகிச்சை செய்யாமல், வேலைக்கு செல்லாததால் உண வுக்கும் வழியில்லாமல் உள்ளோம். எனவே, முதல்வர் நிவாரண நிதி கொடுத்து சிகிச்சை செய்யவும், ஏதாவது அரசு பணி கொடுத்து உதவுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.