

மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்தி: வரும் மே-1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப் மற்றும் ஹோட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்படும்.
அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.