

செய்தி மக்கள் தொடர்புத் துறை குவைத் திட்டப் பணிகளுக்கு வேலை செய்ய அனுபவம் உள்ள வரைவாளர்கள் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், '' இந்திய தொலை தொடர்புத் துறை குவைத் திட்டப் பணிகளுக்கு பொறியியற் பட்டத்துடன் தொலை தொடர்புத் துறையில் 15 வருடங்களுக்கு மேல் அனுபவத்துடன் தகவல் மற்றும் பயிற்சி பிரிவில் உள்ள எஸ்எம்இ இன்ஜினியர்கள், பிஆர்க் பட்டத்துடன் 10 வருட அனுபவம் பெற்ற வெளிப்புற வடிவமைப்பு அறிந்த கட்டிட வடிவமைப்பாளர்கள், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் மற்றும் கட்டமைப்பு பிரிவில் பட்டத்துடன் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்று முறையே குறைந்த மின்அழுத்தம், மின்பராமரிப்பு, தீயணைப்பு தடுப்பு பணிகள், மெக்கானிக்கல் பிரிவில் குளிர்சாதனம், கட்டமைப்பு பிரிவில் அனுபவம் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம் பெற்ற ஆட்டோகாட் வரைவாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கான தொழில்நுட்ப விவரங்கள், ஊதியம் மற்றும் இதர சலுகைகளை> www.omcmanpower.com என்ற இந்நிறுவன இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படத்தை omcresum@gmail.com என்ற ஈமெயிலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்