Published : 28 Apr 2015 10:18 AM
Last Updated : 28 Apr 2015 10:18 AM

சிங்கப்பூர் மருத்துவக் குழுவினருடன் தமிழக சுகாதாரத் துறை ஆலோசனை

சிங்கப்பூர் மருத்துவக் குழுவின ருடன் தமிழக சுகாதாரத் துறை நேற்று ஆலோசனை நடத்தியது.

பிறக்கும்போது நேரிடும் சிசு மரண விகிதம் இந்திய அளவில் 1,000-க்கு 40 ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 21ை ஆக குறைந்துள்ளது.

அதேபோல, பிரசவிக்கும் போது இறக்கும் தாய்மார்கள் இறப்பு விகிதம் இந்திய அளவில் 1 லட்சத்துக்கு 167 ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் 68 என்ற அளவில் உள்ளது.

இந்த நிலையில் தாய் - சேய் நலத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் மருத்துவ நிபுணர்கள் குழு நேற்று சென்னை வந்தனர். இந்தக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) குழந்தைசாமி, சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதர் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் தாய் - சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது உட்பட தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு சுகாதார சிறப்புத் திட்டங்கள் குறித்து சிங்கப்பூர் குழுவினருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் மற்றும் சுகாதாரத்தை பேணி காக்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை சிங்கப்பூர் மருத்துவக் குழுவினர் வெகுவாகப் பாராட்டினார். மேலும், தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து சுகாதார குறியீட்டில் மேலும் முன்னேற்றம் அடைவதற்கும், பல்வேறு சுகாதாரத் திட்டங்களை பகிர்ந்து கொள்வதுடன், பரஸ்பரம் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிங்கப்பூர் மருத்துவ நிபுணர் குழுவினர் திருச்சி அரசு பொது மருத்துவமனை, ரங்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பிற சுகாதார நிலையங்களையும் பார்வையிட உள்ளனர்.

தமிழகத்தில் தாய் - சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது உட்பட தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு சுகாதார சிறப்புத் திட்டங்கள் குறித்து சிங்கப்பூர் குழுவினருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x