கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம்: தமிழக விவசாயிகள் கைது

கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம்: தமிழக விவசாயிகள் கைது
Updated on
1 min read

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து, கர்நாடக அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணைகளை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக கர்நாடக அரசு பட்ஜெட்டில் 25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் தமிழகத்தில் திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, சிதம்பரம் ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடந்த போராட்டத்தில் கர்நாடக அரசின் பட்ஜெட் நகலை விவசாயிகள் எரித்தனர். இதனால் விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in