

குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.1000த்தை குறைக்க வேண்டாம் என்று ஏஐடியுசி தொழிற்சங்க பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வருங்கால வைப்பு நிதி யுடன் இணைக்கப்பட்ட ஓய் வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 நிச்சயிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தது.
ஆனால், அதிலும் பல நிபந் தனைகள் இருந்ததால் பல ருக்கு ரூ.1000 முழுமையாக கிடைக்கவில்லை.
இ.பி.எப் ஓய்வூதியத்தை பெறும் 48.6 லட்சம் பேர் வேலையில் இருக்கும்போது தங்கள் சம்பளத்திலிருந்து 8.33 சதவீதம் தொகை செலுத்தி உள்ளனர். அவர்களில் 32 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய்க் கும் குறைவான ஓய்வூதியம் இருந்தது, 15 லட்சத் துக்கு மேற்பட்டவர்களுக்கு 500 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது.
பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு அமலுக்கு வந்த உத்தரவு ஏழு மாதங்களில் காலாவதி ஆகிவிட்டது என்று வருங்கால வைப்பு நிதி கூறியுள்ளது ஒரு நாடகமாகும்.
உடனடி நடவடிக்கை தேவை
பல ஆண்டுகள் நாட்டுக்காக உழைத்த தொழிலாளர்களின் வயது முதிர்ந்த காலத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கூட வழங்க பாஜக அரசு வழங்க விரும்பவில்லை என் பது கண்டனத்துக்குரியது. ஓய்வூதியத்தை குறைக்காமல் வழங்கிட மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.