

சென்னை பெட்ரோலியம் நிறுவன வேலைவாய்ப்பில் தமிழக மக் களுக்கு துரோகம் இழைக்கப் பட்டுள்ளதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 104 இளநிலை பொறியியல் உதவியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறி விப்பு அண்மையில் வெளியிடப் பட்டு, ஆன்லைனில் விண்ணப்பங் கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கு இந்தியா வின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக் கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பொதுத்துறை நிறு வன வேலைவாய்ப்பில் கடை பிடிக்கப்பட்டு வரும் மரபுக்கு எதிரானது. மத்திய அரசுக்கு சொந்தமான பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலைக்கு குறை வான பணியிடங்கள், நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டுதான் நிரப்பப்படுகின்றன. அதிகாரி கள் நிலையிலான பணியிடங் களுக்கு மட்டுமே அகில இந்திய அளவில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
மராட்டியம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அம்மாநிலங் களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட தைப் போல சென்னை பெட்ரோ லியம் நிறுவனமும் தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவல கங்களில் பதிவு செய்திருப்பவர்கள் மட்டும்தான் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.
தமிழகத்தின் இயற்கை வளங் களால்தான் சென்னை பெட்ரோ லிய நிறுவனம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறது. அந்நிறுவனத் துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசுதான் வழங்குகிறது. அந்த நிறுவனம் வெளியேற்றும் கழிவு மற்றும் மாசால் ஏற்படும் பாதிப்புகளையும் தமிழக மக்கள்தான் தாங்கிக் கொள்கின்றனர். ஆனால், அந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பயன்களை மட்டும் மற்ற மாநிலத்தவர்கள் அனு பவிக்க வேண்டும் என்பது நியாயமானதல்ல.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் மத்திய பொதுத்துறை நிறுவனங் களும், உயர்கல்வி நிறுவனங் களும் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றன. ஒரே நாட்டில் வெவ்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறு அளவுகோல்களை கடைபிடிப்பது முறையல்ல.
எனவே, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலைக்கு கீழான பணிகள் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு பொது அறிவிப்பு வெளியிட வேண்டும். அதேபோல் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் 50 சதவீதம் இடங்கள் அந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் களுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.