அரசு கேபிள் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பாமக ஆதரவு
இலவச சேனல்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அரசு கேபிள் நிறுவனத்தின் முடிவை எதிர்த்து போராடும் தமிழ் தொலைக்காட்சி சேனல்களுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் செயற்கைகோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் தேவநாதன், வசந்த் தொலைக்காட்சி உரிமை யாளர் எச்.வசந்தகுமார், தமிழன் தொலைக்காட்சி உரிமையாளர் கலைக்கோட்டுதயம் ஆகியோர் ராமதாஸை சென்னையில் நேற்று சந்தித்துப் பேசினர்.
இது குறித்து பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொலைக்காட்சி ஒளிபரப்பில் தனியார் ஆதிக்கத்தை ஒழிப்பதற் காக கொண்டு வரப்பட்ட அரசு கேபிள் நிறுவனம், இலவச சேனல் களை ஒடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இலவச சேனல்கள் ஒவ்வொன்றும் மாதந் தோறும் ரூ.63 லட்சம் கட்ட வேண் டும் என இந்நிறுவனம் அறிவித்துள் ளது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கையால் தமிழ்ச் சேனல்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
அரசு கேபிள் நிறுவனத்தின் தவ றான அணுகுமுறையால் தமிழ் தொலைக்காட்சிகள் பாதிக்கப் படும். இவற்றில் பணியாற்றும் ஆயி ரக்கணக்கான பத்திரிகை யாளர்கள், தொழில்நுட்பக் கலை ஞர்கள் மட்டுமின்றி, மறைமுக மாக வேலை வாய்ப்பு பெறும் லட்சக்கணக் கானோரும் வாழ்வா தாரத்தை இழக்க வேண்டிவரும்.
எனவே, தமிழ்ச் சேனல்கள் இதுவரை ஒளிபரப்பப்பட்ட அதே அலைவரிசையில் ஒளிபரப்பப்பட வேண்டும். லாப நோக்கில் கட் டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும். இக்கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ் செயற் கைக்கோள் தொலைக்காட்சி நிறு வனங்கள் சங்கம் அறவழியிலும், சட்ட ரீதியாகவும் நடத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் பாமக முழு ஆதரவு அளிக்கும் என சங்க நிர்வாகிகளிடம் ராமதாஸ் உறுதி அளித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
