

மகளிர் சுய உதவிக் குழுக்கள் செய்த பொருட்களை விற்பனை செய்யும் ‘கோடை சித்திரை விழா 2015’ கண்காட்சியை மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் ‘கோடை சித்திரை விழா 2015’ கண்காட்சியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா, சமூக நலத்துறை அமைச்சர் பா. வளர்மதி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த விற்பனை கண்காட்சியில் 55 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பனை ஓலையில் செய்யப்பட்ட கைப்பைகள், மூலிகை விதை களில் செய்யப்பட்ட நகைகள்,சணல் பைகள், பருத்தி ஆடைகள், வாழை நாரால் செய்யப்பட்ட பொருட் கள் உள்ளிட்டவை இங்கு விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. இந்த விற்பனை கண்காட்சி அடுத்த மாதம் 17-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது