

துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளார்.
துக்ளக் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சோ.ராம சாமி (79). இவருக்கு சனிக்கிழமை மாலை திடீரென்று மூச்சுத் திணறல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர் கள் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சோ உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரி வித்தனர். அவரை குடும்பத் தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.