Published : 28 Apr 2015 09:57 AM
Last Updated : 28 Apr 2015 09:57 AM

தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையிலும் சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகள் குறைவு: சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கவலை

தொழில்நுட்ப வளர்ச்சி முன் னேற்றம் அடைந்து வரும் இந்த காலகட்டத்திலும் சாதி ஒழிப்பு சம்பந்தமான சீர்திருத்த நட வடிக்கைகள் குறைந்த அளவே நடைபெறுகிறது என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் கூறியுள்ளார்.

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பல்கழைக் கழகம் மானுடவியல் துறை பொதுப்பள்ளிக்கான மாநில மேடை யுடன் இணைந்து சென்னை பல் கழைக்கழகத்தில் “சாதியொழிப்பு: சிந்தனைகளும் சாத்தியங்களும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது.

இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த சென்னை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் டேவிட் ஜவஹர் நிகழ்ச்சியில் பேசியதாவது:

சமுதாயத்தில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் நம்முடைய நாட்டில் இன்னமும் சாதி அமைப்பு முறையில் எந்த மாற்றமும் நடைபெறாமல் உள்ளது. மனிதர்களை சாதியின் பெய ரால் ஓடுக்கும் சாதிய அமைப்பு முறையில் இருந்து மாற ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

பல தொழில்நுட்ப மாற்றங்கள் முன்பைவிட அதிகளவில் நடை பெற்று வருகிறது. ஆனால் இந்த மாற்றங்கள் நடைபெற்ற போதும் சாதியின் அடிப்படைகள் கூறுகளில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. சாதிய ஓழிப்புக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் குறைந்த அளவில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செய லாளர் சமூவேல்ராஜ், ‘சாதியற்ற சமூகத்திற்கான இயக்கம்’ என்ற ஆய்வறிக்கையை சமர்ப் பித்து பேசும்போது,”சாதிய ஓழிப்பு நடவடிக்கைக்கு ஒரு ஆக்க பூர்வமான செயல்திட்டம் தேவைப் படுகிறது. அரசியல் சீர்திருத்த நடவடிக்கையும்,சமூக சீர்திருத்த நடவடிக்கையும் ஒன்றாக செயல்பட வேண்டும்” என்றார்.

தீர்மானங்கள்

இக்கருத்தரங்கில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி அமைப்புகளும் தங்கள் கல்வி ஏற்பாடு, பாடத் திட்டம், பாட நூல், கற்றல் முறை ஆகியவற்றில் சாதி ஒழிப்பு மற்றும் சாதிய வன்கொடுமைகளை தடுத்தல் குறித்து ஆய்வு இடம்பெற செய்ய வேண்டும்.

‘இந்திய அரசும் மாநில அரசு களும் உரிய சட்டம் மற்றும் நிர்வாக நடைமுறை ஏற்பாடுகளை உருவாக்கி, சாதி அடிப்படையிலான அனைத்து பாகுபாடுகளையும் தடை செய்ய வேண்டும். சாதி ரீதியான அணி சேர்க்கையை தடை செய்ய வேண்டும்.

பொது அமைப்புகள், கட்டிடங்கள், கல்வி நிறுவங்கள் மற்றும் வாழும் அல்லது மறைந்த தலைவர்களின் பேர்களுடன் சாதி பெயர் இருப்பது தடை செய்ய வேண்டும்.

இந்தியாவின் பண்முக பண் பாட்டின் கூறுகளான உணவு முறை, சமய நம்பிக்கை உள்ளிட்ட வேறுபாடுகளை அங்கீகரித்து, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் ‘சாதி ஒழிப்பு: ஒரு சமூக வரலாறு’ என்ற தலைப்பில் பி.மாதையன், “சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் நாடக கலைஞர் பிரளயன், ‘சாதி: ஒரு சட்டவிரோத சமூக அமைப்பு’ - பேராசிரியர் ஏ.டேவிட் அம்ப்ரோஸ், ‘சாதி ஒழிப்பு: அரசியலமைப்பின் பிரிவு’ வழக்கறிஞர் சுரேஷ் பாபு, ‘இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளின் போக்கு’ - பேராசிரியர் சீனிவாசன், ‘சாதி மறுப்புத் திருமணம்: சாதி ஒழிப்புக்கான வழி’ என்ற தலைப்பில் உதயன் ஆகியோர் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பல் கழைக்கழக மானுடவியல் துறை பேராசிரியர் தாமோதரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x