ஏமனில் சிக்கித் தவித்த 46 தமிழர்கள் சென்னை திரும்பினர்

ஏமனில் சிக்கித் தவித்த 46 தமிழர்கள் சென்னை திரும்பினர்
Updated on
1 min read

ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த 46 தமிழர்கள் நேற்று காலையில் சென்னை திரும்பினர்.

ஏமனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்ததை தொடர்ந்து அங்கிருந்த வெளிநாட்டவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக 3 விமா னங்கள் இந்தியாவிலிருந்து அனுப் பப்பட்டன.

இந்த விமானங்கள் மூலம் 664 பேர் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டனர்.

இதில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் 330 பேர் நேற்று முன்தினம் இரவு கொச்சி வந்தடைந்தனர். இந்திய விமானப்படையின் 2 விமானங்கள் மூலம் 334 பேர் நேற்று முன்தினம் இரவில் மும்பை வந்தனர். இதில் 46 பேர் தமிழர்கள். அவர்கள் அனைவரும் மற்றொரு விமானம் மூலம் நேற்று அதிகாலையில் சென்னை வந்தடைந்தனர். தமிழக அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஏமனில் சிக்கி தவித்த 86 தமிழர்கள் இதுவரை தாயகம் திரும்பியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in