Published : 25 Apr 2015 08:43 AM
Last Updated : 25 Apr 2015 08:43 AM

ஆவடி சிஆர்பிஎப் பயிற்சிப் பள்ளியில் வெடிப் பொருட்கள் மாதிரி அறை திறப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சிப் பள்ளியில் வெடிப் பொருட்களின் (IMPROVICE EXPLOSIVE DEVICE) மாதிரி அறை நேற்று திறக்கப்பட்டது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தென் பிராந்திய தலைவர் விஷ்ணுவர்தன ராவ் அதைத் திறந்துவைத்தார்.

இங்கு, 1969 முதல் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சிப் பள்ளியில் இதுவரை 56,000 காவலர்கள பயிற்சி முடித்துள்ளனர். தற்போது, 1,775 புதிய காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

உடற்பயிற்சி, அணிவகுப்பு, நவீன ஆயுதங்களைக் கையாளுதல், கையெறி குண்டை வீசுதல், துப்பாக்கியுடன் கூடிய குண்டெறியும் பயிற்சி, வரைப்படக் கலை, நக்ஸல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய கிரிமினல் சட்டம், மனித உரிமைச் சட்டம் ஆகியன குறித்து இங்கு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வெடிப் பொருட்கள் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

எனவே, வெடிப் பொருட்கள், அவற்றை எப்படி வெடிக்கச் செய்வது, அவை எவ்வாறு வெடிக்கும், அதன் பாதிப்பு எப்படி இருக்கும் ஆகியன குறித்து பயிற்சிக் காவலர்கள் அறிந்து கொள்ளும் வகையில், வெடிப் பொருட்களின் மாதிரி அறை திறக்கப்பட்டது.

மாதிரி அறையைத் திறந்து வைத்த பிறகு, வெடிகுண்டு தாக்குதல் மற்றும் அதிலிருந்து தப்பிப்பது குறித்து பயிற்சிக் காவலர்களின் நிகழ்த்திய ஒத்திகையை விஷ்ணுவர்தன ராவ் பார்வையிட்டார்.

ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சிப் பள்ளி முதல்வர் ரகுராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆவடி சிஆர்பிஎப் பயிற்சிப் பள்ளியில் வெடிப் பொருட்கள் மாதிரி அறையைத் திறந்துவைத்துப் பார்வையிடுகிறார் சிஆர்பிஎப் தென் பிராந்திய தலைவர் விஷ்ணுவர்தன ராவ்.

1969 முதல் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சிப் பள்ளியில் இதுவரை 56,000 காவலர்கள பயிற்சி முடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x