

அரியலூர் அருகே பாமக பிரமுகர் நேற்று முன்தினம் இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள இலைக்கடம்பூரைச் சேர்ந்தவர் ப.ராஜா (எ) ராஜசேகர் (26). பாமக பிரமுகர். இவருக்கும், பாமக-விலிருந்து பிரிந்து சென்ற சிலருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு இலைக்கடம்பூருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த ராஜாவை, நின்னியூர் அருகே ஒரு கும்பல் வழிமறித்து, அரிவாளால் வெட்டிக் கொன்றது.
இது தொடர்பாக செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.