

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மீனாகுமாரி குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மீனாகுமாரி குழுவின் பரிந்துரை தமிழக மீனவர்களுக்கு முற்றிலும் எதிரானது.
இந்திய கடல் பகுதியில் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் ஆழ்கடல் மீன் பிடித்தலில் ஈடுபடுவதற்கு புதிய உரிமங்களை வழங்கக்கூடாது.
இந்திய கடல் வளத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
மீனாகுமாரி குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்'' என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.