

லட்சத் தீவுகள் அருகே உள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஆங்காங்கே கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது.
நேற்று பதிவான மழை நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 15 செ.மீ., நாகர்கோவிலில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது.
காற்று மேல் அடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கன மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.