

ஜாபர்கான்பேட்டையில் செம்மரக் கட்டைகளை பதுக்கி வைத்திருந்த கிடங்கு உரிமையாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, ஆந்திரத்திலும் தமிழகத்திலும் செம்மரக் கடத்தல் தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்துவருகிறது. செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் சிலர் செம்மரக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக சென்னை போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கிண்டி ஜாபர்கான்பேட்டையில் கேரம் போர்டு தயாரிக்கும் நிறுவனத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். அதன் அருகில் இருந்த கிடங்கில் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட செம்மரக் கட்டைகள் 13 மூட்டைகளில் 3 டன் அளவுக்கு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிடங்கு உரிமை யாளர் விஷாந்த் குமார் உட்பட 7 பேர் கைது செய்யப் பட்டனர்.