Published : 17 Apr 2015 08:30 AM
Last Updated : 17 Apr 2015 08:30 AM

ஆந்திரா துப்பாக்கிச் சூடு விவகாரம்: சாட்சியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

ஆந்திரா மாநிலத்தில் 20 பேரை கடந்த 7-ம் தேதி அம் மாநில அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். இதில் 7 பேர் தருமபுரி மாவட்டம் சித்தேரிமலை கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் ஒருவரான ஹரி கிருஷ்ணனின் மகன் பாலச் சந்திரனும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்பு ஆந்திரா சென்றுள்ளார்.

கட்டிட வேலை எனக் கூறி ஏஜென்டுகள் அழைத்துச் சென்றதாகவும், முன்னதாகச் சென்ற பேருந்தில் பயணித்த தனது ஊர்க்காரர்கள் சிலர் மது போதையுடன் சென்றதால் ஆந்திரா போலீஸ் அவர்களை பிடித்து வைத்ததாகக் தகவல் அறிந்து, தான் பாதி வழியிலேயே இறங்கி ஊர் திரும்பியதாகவும், அதன் பின்னர் தன் தந்தை உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தெரிந்ததாகவும் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

மனித உரிமை ஆணைய விசார ணைக்கு பாலச்சந்திரன் முக்கிய சாட்சியாக உள்ளார். இவருக்கும், சித்தேரி ஊராட்சி மன்றத் தலைவர் அழகரசனுக்கும் ஆந்திர மாநில காவல்துறை மற்றும் செம்மரக் கடத்தல் கும்பல் மூலம் ஆபத்து ஏற்படலாம் என மனித உரிமை ஆணையம் தரப்பில் கருதப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக பாலச்சந்திரன், அழகரசன் ஆகியோர் வீடுகளுக்கு ஒரு எஸ்.ஐ தலைமையில் 4 பேர் அடங்கிய காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x