Last Updated : 21 Apr, 2015 08:14 AM

 

Published : 21 Apr 2015 08:14 AM
Last Updated : 21 Apr 2015 08:14 AM

அதிமுக - பாஜக திடீர் மோதல் பின்னணி: எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைவதைத் தடுக்க திட்டம்?

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர்கள் அறிவித்து வருவதன் பின்னணியில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதை தடுக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலை சந்திக்க அர சியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, வெற்றி வாய்ப்பு உள் ளிட்ட அம்சங்கள் குறித்து தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை களையும் நடத்தி வருகின்றன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்து செயல்படத் தொடங்கியது. தேமுதிகவும் ஒதுங் கியே இருக்கிறது. இதனால் பாஜக கூட்டணி தொடர்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், மத்திய பாஜக அரசுக்கு அதிமுக ஆதரவளிக்கத் தொடங்கியது. கடந்த ஜனவரி 18-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து மக்களவையில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை அதிமுக ஆதரித்தது. இவற்றையெல்லாம் வைத்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பக்கம் அதிமுக சென்றுவிடும் என்று செய்திகள் வருகின்றன. அதேபோல தேமுதிக, காங்கிரஸ், இடதுசாரிகளை இழுத்து பெரிய கூட்டணி அமைக் கலாம் என்ற நினைப்பில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என பாஜக தலைவர்கள் திடீரென பேசி வருகின்றனர். சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக ஆட்சி யில் ஊழல் அதிகரித்து வருவ தாக தெரிவித்தார். இதே குற்றச் சாட்டை கூறிய மற்றொரு மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ் ணன், அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜ னிடம் கேட்டபோது, ‘‘அதிமுக அரசை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். ஊழல் அரசை நடத்தி வரும் அதிமுகவுடனும், 2ஜி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள திமுகவுடனும் கூட்டணி அமைக் கும் வாய்ப்பே இல்லை. சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் மாற்று அணியை உருவாக்குவோம்’’ என்றார்.

பாஜக தலைவர்களின் இந்த திடீர் அதிமுக எதிர்ப்புக்கு பின் னணியில் கூட்டணி திட்டமே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலி தாவைக் காப்பாற்ற பாஜக தலைவர்கள் முயற்சி செய்வதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டி வரு கின்றன. இந்தக் குற்றச்சாட்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என பாஜக தலைமை யோசிக்கிறது. இதனால், தங்கள் மீது பழி வந்துவிடக் கூடாது என் பதற்காகவே இப்போது அதிமு கவை பாஜகவினர் விமர்சிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், 2004 மக்களவைத் தேர் தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தபோது, திமுக தலைமை யில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 100 சதவீத வெற்றியைப் பெற்றன. தற்போது அதிமுக பாஜக கூட் டணி என்ற செய்திகள் தொடர்ந்து வெளியானால் 2004-ல் நடந் ததைப்போல எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுக அணிக்கு செல் லக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. இதைத் தடுக்கவே அதிமுகவை பாஜக தலைவர்கள் திடீரென விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதை யாராலும் தடுக்க முடியாது. ரங்கம் இடைத்தேர்தலிலேயே பாஜகவின் செல்வாக்கு என்ன என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் பாஜகவை ஒரு பொருட்டாகவே மக்கள் நினைக்க மாட்டார்கள். அதிமுக, பாஜகவின் ஆசைகள் நிறைவேறாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x