

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைப் பெருந்திருவிழா ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலி லிருந்து புறப்பட்டு தேரில் எழுந்த ருளினார். தேரோட்டத்தில் பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேரோட்டத்தையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் பல்வேறு அலகுகள் குத்தியும், பறவைக் காவடி எடுத்துவந்தும், அக்னிச்சட்டி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தேரோட்டத்தையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் கண்காணிப்பு கேம ராக்களை பொருத்தி போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டனர். திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களிலிருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சித்திரைப் பெருவிழாவின் 13-ம் நாள் நிகழ்ச்சியாக ஏப்.17-ம் தேதி தெப்பத் திருவிழாவும், ஏப்.21-ம் தேதி உற்சவ அம்மன் தங்கக் கமல வாகனத்தில் திருவீதியுலா காட்சியும் நடைபெறவுள்ளது. தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடு களை கோயில் செயல் அலுவலரும் அறநிலையத் துறை இணை ஆணையருமான க.தென்னரசு மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.