தொழிலாளர் தினத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தொழிலாளர் தினத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
Updated on
1 min read

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் 1-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ஊரக பகுதிகளில் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து கிராம மக்களிடம் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 633 ஊராட்சிகளில், வரும் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ஊரக பகுதியில் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து கிராம மக்களிடம் விவாதித்து, அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.

சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள், சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு வரைவு பட்டியல் மீதான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது குறித்த விழிப்புணர்வு போன்ற அரசின் பல்வேறு பணிகள் குறித்து கிராம மக்களிடம் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in