

டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடி மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி எழும்பூரில் ரத்தத்தில் கைரேகை வைத்துப் போராட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மற்றும் துறை அமைச்சரிடம் மனு அளிக்கவும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.