

தொழிலாளர் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்கான உலக தினம் இன்று (ஏப். 28) கடைபிடிக்கப்படும் நிலையில், அமைப்புசாரா தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பு- உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு சிறப்புச் சட்டம் தேவை என தொழிலாளர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
2003-ம் ஆண்டு முதல் ஏப். 28-ம் தேதி, தொழிலாளர் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கான உலக தினமாக கடைப்பிடிக் கப்படுகிறது.
இந்தியாவில் தொழிலாளர் பணியிட பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தேசியக் கொள்கையை கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டது. ஆனால், இன்று வரை அந்தக் கொள்கை சட்ட வடிவமாக்கப்படவில்லை.
இந்த நிலையில், அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கான பணியிட பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அவசரச் சட்டத்தை, உரிய நிதி பங்களிப்புடன் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று தொழிலாளர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மா. கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:
சர்வதேச தொழிலாளர் அமைப் பின் மதிப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 16 கோடி பேர் தொழில்சார் நோய்களுக்கு ஆளாகின்றனர், ஏறத்தாழ 20 லட்சம் பேர் பலியாகின்றனர்.
உலகம் முழுவதும் 32 கோடி தொழிலாளர்கள், பணியின்போது விபத்துகளுக்கு இரையாகின்றனர். ஒவ்வொரு 15 விநாடியும் உலகம் முழுவதும் 151 தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். ஒவ்வொரு 15 விநாடியும் ஒரு தொழிலாளி தொழில்சார் விபத்து அல்லது நோயால் பலியாகிறார்.
அமைப்புசாரா தொழிலாளர் களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர் களுக்கு சுத்தமான குடிநீர், உணவு, ஓய்வுநேரம், கழிப்பறைகள், குழந்தைகள் காப்பகம், ஓய்வறைகள், பாதுகாப்புக் கருவிகள், போக்குவரத்து வசதிகள் உள் ளிட்ட விதிமுறைகள் உருவாக்கப் பட்டு அவை நடைமுறைப்படுத் தப்பட வேண்டும்.
விபத்துக்கு சிகிச்சை அளிப்பது, சிகிச்சை காலத்தில் ஊதியமளிப் பது, ஊனமடைந்தால் இழப்பீடு வழங்குவது, மரணமடைந்தவர் களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குவது ஆகியவை விபத்து கால பாதுகாப்பாகும்.
சிறப்புச் சட்டம் தேவை..
அமைப்புசாரா தொழிலாளர் களுக்கும் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த உரிமைகள் கிடைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை. உடல் உழைப்புத் தொழிலாளர்களின் உடல்நலம், மனநலம் குறித்த சட் டங்கள் செயல்பாட்டில் இல்லை.
அமைப்புசாரா தொழிலாளர் களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்தை உறுதி செய்ய தேசிய அளவில் கொள்கை மட்டும் போதாது. தேசிய அளவில் சிறப்புச் சட்டம் தேவை. இச்சட்டம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருந்த வேண்டும்.
வளர்ச்சி என்ற போக்கில் அபாயகரமான தொழில் திட்டங்களாலும், கட்டுமானங்களாலும் அமைப்புசார்ந்த, அமைப்புசாராத தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளன.
மத்திய, மாநில சட்டம்..
இந்திய அரசானது மாநில அரசுகள், தனியார் நிறுவனங் கள், தொழிற்சாலைகள் மற்றும் அமைப்புசார்ந்த, அமைப்பு சாராத தொழிற்சங்கப் பிரதிதிநிதி களுடன் இணைந்து தொழிலா ளர்களுக்கான பணியிட பாது காப்பு, உடல்நலம் மற்றும் சுற்றுச் சூழல், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அவசரச் சட்டத்தை உரிய நிதி பங்களிப்புடன் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறை வேற்ற வேண்டும். தமிழக அரசும் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.