

தமிழக மீனவர்களின் 37 பேர் காவலை பருத்தித்துறை நீதிமன்றம் ஏப்ரல் 29 வரையிலும் மீண்டும் நீட்டித்து வெள்ளிக்கிழமை உத்திரவிட்டது.
நாகப்பட்டிணம் அக்கரைப்பேட்டையை சார்ந்த ராஜமாணிக்கம், கந்தசாமி, திருவளர்ச்செல்வன், கனகராஜ் ,செந்தில்குமார் ஆகிய ஐவருக்குச் சொந்தமான விசைப்படகில் நெடுந்துவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 37 பேரை கடந்த ஏப்ரல் 3 அன்று இலங்கை கடற்படையினர் கைதுசெய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
பின்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை நீதிபதி ஏப்ரல் 17வரையிலும் நீதிமன்றக் காவலில் யாழ்பாணம் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். நீதிமன்ற காவல் வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில் மீண்டும் மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பருத்தித்துறை நீதிபதி இரண்டாவது முறையாக ஏப்ரல் 29 வரையிலும் காவலை நீட்டித்து உத்திரவிட்டதை தொடர்ந்து 37 தமிழக மீனவர்கள் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.