

செம்மர கடத்தலில் தொடர்புள்ள தாக காட்பாடியை சேர்ந்த ‘கரகாட்ட’ மோகனாம்பாளை நேற்று ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
வேலூர் அடுத்துள்ள காட்பாடியை சேர்ந்தவர் ‘கரகாட்ட’ மோகனாம்பாள். இவரது வீட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் ரூ. 6 கோடி, 700 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
செம்மர கடத்தல் தொழிலில் தொடர்புடைய, மோகனாம் பாளின் அக்கா மகன் சரவணன் என்பவர் கடத்தல் தொழிலில் சம்பாதித்த பணத்தையும் நகைகளையும் மோகனாம்பாளிடம் கொடுத்து வைத்திருந்ததாக சந்தேகிக் கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சித்தூரில் இருந்து காட்பாடிக்கு சென்ற ஆந்திர போலீஸார் செம்மர கடத்தல் குறித்து விசாரணை நடத்த அவரை கைது செய்து சித்தூருக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் செம்மர கடத்தல் கும்பல்கள் குறித்து தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது. ஆனால் மோகனாம்பாள் கைது விவகாரத்தை ஆந்திர போலீஸார் வெளியில் தெரியாமல் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.