எஸ்ஐஆர் பணிக்காக 4 பார்வையாளர்கள் நியமனம்: தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில்​ நடை​பெற்​று வரும்​ எஸ்​ஐஆர்​ பணி​கள்​ தொடர்​பாக சிறப்​பு ​வாக்​காளர்​ பட்​டியல்​ ​பார்​வை​யாளர்​கள்​ 4 பேர்​ நியமிக்​கப்​பட்​டிருப்​ப​தாக தமிழக தலை​மை தேர்​தல்​ அ​தி​காரி கூறியுள்​ளார்​.

இதுதொடர்​பாக தமிழக தலை​மை தேர்​தல்​ அ​தி​காரி அர்ச்​ச​னா பட்​நாயக்​ நேற்​று வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பு: 2025 ஜன.1-ஐ தகு​தி கொண்​டு நடைபெற்று வரும் வாக்​காளர்பட்டியல்​ சிறப்​பு தீ​விர திருத்தம்​ (எஸ்​ஐஆர்​) 2026 தொடர்​பாக தமிழகத்​துக்கான சிறப்​பு வாக்​காளர் பட்​டியல்​ ​பார்​வை​யாளர்களாக 4 ஐஏஎஸ் அ​தி​காரிகளை இந்திய தேர்​தல்​ ஆணை​யம்​ நியமித்துள்​ளது.

சென்​னை, ​காஞ்​சிபுரம்​, ​திரு​வள்​ளூர்​, செங்​கல்​பட்​டு, ​ராணிப்​பேட்​டை, வேலூர்​, ​திருப்​பத்​தூர்​, ​திரு​வண்​ணா​மலை, ​விழுப்​புரம்​, கள்​ளக்​குறிச்​சி ஆகிய ​மாவட்​டங்​களுக்​கான ​பார்​வை​யாள​ராக மத்​தி​ய கூட்​டுறவு அமைச்​சக இணை செயல​ரான ​ராமன்​கு​மாரும்​ சேலம்​, ​நாமக்​கல்​, ஈரோடு, ​திருப்​பூர்​, நீல​கிரி, கோவை, திண்​டுக்​கல்​, கிருஷ்ணகிரி, தரு​மபுரி ​மாவட்​டங்​களுக்​கான பர்​வையாள​ராக மத்​தி​ய வீட்​டு வச​தி மற்​றும்​ நகர்ப்​புற ​விவ​காரங்​கள்​ அமைச்​சக இணைச்​ செயலர்​ குல்​தீப்​ ​நா​ராயணனும்​ நியமிக்​கப்​பட்​டனர்​.

அதே​போல்​ ​திருச்​சி, கரூர்​, பெரம்​பலூர்​, அரியலூர்​, கடலூர்​, மயி​லாடு​துறை, ​நாகப்​பட்​டினம்​, ​திரு​வாரூர்​, தஞ்​சாவூர்​ ​மாவட்​டங்​களுக்​கான ​பார்​வையாள​ராக இந்​தி​ய வர்த்​தக மேம்​பாட்​டு நிறு​வனத்​தின்​ மேலாண்​ இயக்​குநர்​ நீரஜ் கர்​வாலும்​ புதுக்​கோட்​டை, சிவகங்​கை, மதுரை, தேனி, ​விருதுநகர்​, ​ராம​நாத​புரம்​, தூத்​துக்​குடி, தென்​காசி, ​திருநெல்​வேலி, க​ன்​னி​யாகுமரி ​மாவட்​டங்​களுக்​கான ​பார்​வை​யாள​ராக மத்​தி​ய சு​கா​தா​ரம்​ மற்​றும்​ குடும்​ப நலஅமைச்​சகத்​தின்​ இணைச்​செயலர்​ ​விஜய்​ ரெஹ்​ரா​வும்​ நியமிக்​கப்​பட்​டிருக்​கிறார்​கள்​.

மேற்​கண்​ட சிறப்​பு ​வாக்​காளர்​ பட்​டியல்​ ​பார்​வை​யாளர்​கள்​ தங்​களுக்​கு ஒதுக்​கப்​பட்​டுள்​ள ​மாவட்​டங்​களில்​ எஸ்​ஐஆர்​ பணியின்​ அனைத்​து கட்​டங்​களி​லும்​ குறிப்​பாக கணக்​கீட்​டு கட்​டம்​, உரிமை கோரல்​கள்​ மற்​றும்​ மறுப்புரைகள்​ பெறும்​ ​காலம்​, அறி​விப்​புக்கட்​டம்​ மற்​றும்​ இறு​தி ​வாக்​காளர்​ பட்​டியல்​

வெளி​யீடு வரை மேற்​கொள்​ளப்​படும்​ நட​வடிக்​கை களை ​முழு​மை​யாக கண்​காணிப்​பார்கள்.

மேலும்​ இந்​தி​ய தேர்​தல்​ ஆணை​யம்​ வழங்​கிய அனைத்​து வழி​காட்​டு​தல்​களும்​ ​முறை​யாக செயல்​படு​வதை கண்​காணிப்​பதுடன்​ ​வாக்​காளர்​ பட்​டியலில்​ தகு​தி​யானோர்​ எவரும்​ ​விடு​ப​டாததை​யும்​, தகு​தி​யற்​றோர்​ எவரும்​ சேர்க்​கப்​படக்​ கூ​டாது என்​ப​தை​யும்​ உறு​தி செய்​வர்​. இவ்​வாறு அவர்​ கூறியுள்​ளார்​.

6.36 கோடி படிவங்கள் பதிவேற்றம்: எஸ்ஐஆர் பணிகள் நிலவரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட தினசரி அறிக்கையின்படி தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகிக்கும் பணி 99.91 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது 6 கோடியே 40 லட்சத்து 59,971 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும் பணி 99.27 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதாவது 6 கோடியே 36 லட்சத்து 44,038 வாக்காளர்களின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

<div class="paragraphs"><p>தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் </p></div>
SIR | சிவகங்கை நாதக வேட்பாளர் இந்துஜா பெயர் இறந்தோர் பட்டியலில் இருந்ததால் ஆட்சியரிடம் வாக்குவாதம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in