

சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஜாகீர் உசேன் கூட்டாளி கள் 3 பேர் பிடிபட்டனர். சென்னையில் குண்டு வைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வீடியோவில் பதிவு செய்து வைத்திருந்த சி.டி.க்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளின் தூண்டு தலின் பேரில் தமிழகத்துக்கு உளவாளியாக வந்த ஜாகீர் உசேன் செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டார். ஜாஹி ரிடம் போலீஸார் நடத்திய விசார ணையில் அவரது கூட்டாளிகள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து சூளைமேடு, சவுகார்பேட்டைகளில் பதுங்கி இருந்த ஜாகீர் உசேனின் கூட்டாளி கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சிலர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். பிடிபட்ட வர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல சிடிக்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஒரு சிடியில் சென்னையில் உள்ள சில முக்கிய இடங்களின் காட்சிப் பதிவுகள் உள்ளன. மக்கள் கூடும் இடங்கள் பற்றிய விபரம் அந்த வீடியோ காட்சிகளில் உள்ளது.
இதன்மூலம் வீடியோ காட்சிக ளில் உள்ள இடங்களில் குண்டு வெடிப்பு நடத்த பாகிஸ்தான் தீவிர வாதிகள் சதி திட்டம் தீட்டியிருக்க லாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து ஜாகீர் உசேன் கும்பலை முழுமையாக பிடிக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.