

சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் சீசன் களைகட்டியுள்ளது. இங்கு ஆர்வமிகுதியால் கடலில் குளிக் கும் சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வரு வதால், கண்காணிப்பை தீவிரப் படுத்த சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்துகின்றனர். பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டாலும் சுற்றுலாப் பயணிகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என போலீஸார் விளக்கமளிக் கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்ல புரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற கடற்கரை மற்றும் குடைவரை கோயில்கள், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் ஆகியவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுத்து வருகின்றன. இங்கு, பரந்து விரிந்த கடலில் குளிப்பதையே சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
ஆனால், மாமல்லபுரம் கடற் கரை பகுதி இயற்கையாகவே அபாயகரமான பகுதியாக விளங்கு கிறது. கடலோர பாதுகாப்பு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீ ஸார் எச்சரிக்கை பலகைகளை அமைத்துள்ளனர். எனினும், போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் தீவிர கண்காணிப்பு இன்மை போன்ற காரணங்களால், 2014-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் வரை, கடல் நீரில் மூழ்கி 27 பேர் பலியாகி உள்ளனர்.
தற்போது சுற்றுலா சீசன் தொடங்கியுள்ளதால் ஏராள மானோர் மாமல்லபுரத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதனால், ஆபத்தான கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களுக்கும் ஆபத்துதான்
இதுகுறித்து, மாமல்லபுரம் பகுதி மீனவ மக்கள் கூறியதாவது: மாமல்லபுரம் கடலில் ஏற்படும் திடீர் சுழற்சி, மணல் திட்டுகளில் ஏற்படும் திடீர் பள்ளங்களால், கடலில் குளிப்போர் இழுத்துச் செல் லப்படுகின்றனர். கடலின் நீரோட்டம் அடிக்கடி மாறுவதால் நீச்சல் தெரிந்தவர்களேகூட உயிரிழக்க நேரிடுகிறது. மீனவர்களாகிய நாங்கள்கூட கடலில் குளிக்க அஞ்சுகிறோம் என்று தெரிவித்தனர்.
எதிரிகளாக பார்க்கின்றனர்
இதுகுறித்து, மாமல்லபுரம் கடலோர பாதுகாப்புப் படை ஆய்வாளர் பி.வேலு கூறியதாவது: கடற்கரை பகுதியில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் அமைத் துள்ளோம். இப்பகுதி மீனவ கிராமங்களைச் சேர்ந்த 30 இளை ஞர்களை ஊர்க்காவல் படையில் சேர்த்து, போதிய பயிற்சி அளித்து, கடற்கரை பகுதிகளில் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். கூடுதலாக 10 கமாண்டோ வீரர்களும் ரோந்து வருகின்றனர்.
கடலில் குளிப்பதை தடுக்கும் போலீஸாரை, சுற்றுலாப் பயணி கள் எதிரிகளைப் போல பாவிக்கின் றனர். எச்சரிக்கை பலகைகளையும் பிடுங்கி எரிகின்றனர். பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணி களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க முடியும்.
கடலில் குளிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து விழிப் புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். கடலோர பாதுகாப்பு காவல் நிலை யங்கள் விரைவில் இங்கு அமைய உள்ளதால், கடற்கரை கண் காணிப்புப் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டு உயிரிழப்புகள் தடுக்கப் படும் என்று அவர் தெரிவித்தார்.