ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனுக்கு காங்கிரஸில் பதவி

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனுக்கு காங்கிரஸில் பதவி
Updated on
1 min read

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெராவுக்கு காங்கிரஸில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், திராவிடர் கழகம், திமுக மற்றும் காங்கிரஸில் முக்கியத் தலைவராக இருந்த ஈ.வி.கே.சம்பத்தின் மகனு மான இளங்கோவன், 2-வது முறையாக தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார்.

அவருக்கு சஞ்சய், ராம் என்ற இரு மகன்கள் உள்ளனர். அவர்களில் ராம் தனது பெயரை திருமகன் ஈவெரா என மாற்றிக் கொண்டு அரசி யல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த நவம்பர் 2-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோ வன் பொறுப்பேற்ற பிறகு கட்சி யின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு திருமகன் ஈவெரா அடிக்கடி வரத் தொடங்கி னார்.

அதனைத் தொடர்ந்து அவ ருக்கு கட்சியின் சமூக ஊடகத் துறை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், எம். கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் என பலரும் காங்கிரஸில் பொறுப்புகளில் இருக்கும் நிலையில் இளங்கோ வனின் மகனுக்கும் பதவி வழங்கப் பட்டுள்ளது.

ஊடகத் துறையின் தலைவராக கோபண்ணா நியமனம்:

தமிழக காங்கிரஸ் ஊடகத் துறையின் தலைவராக ஆ.கோபண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ஊடகத் துறை பொறுப்பாளராக இருக்கும் அவர், தேசிய முரசு என்ற இதழை நடத்தி வருகிறார்.

அமெரிக்கை நாராயணன், எஸ்.ஜோதிமணி, எஸ்.விஜயதாரணி, திருச்சி வேலுச்சாமி, உ.பலராமன், எம்.ஜோதி, பொன்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எம்.இதாயத்துல்லா, கே.பாலசுப்பிரமணியன், எர்ணாஸ்ட் பால், ஆர்.சுதா ஆகியோர் காங் கிரஸ் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என இளங்கோவன் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in