

மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) கடந்த 2006-ம் ஆண்டு வரை குடும்பநல வழக்கு கள் விசாரிக்கப்பட்டன. ‘மக்கள் நீதிமன்றம் குடும்பநல வழக்கு களை விசாரித்தாலும் விவா கரத்து வழங்கக்கூடாது’ என்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு அப்போது உத்தரவிட்டது. இதையடுத்து மக்கள் நீதிமன்றத் தில் குடும்பநல வழக்குகளை விசாரிப்பது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ‘விவாகரத்து வழங்கக்கூடாது என்றுதான் கூறப் பட்டதே தவிர, தம்பதியர் சேர்ந்து வாழ விரும்புவது மற்றும் ஜீவனாம்சம் கோருவது தொடர் பான வழக்குகளை மக்கள் நீதி மன்றம் விசாரிக்க தடையில்லை’ என்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி யுமான டி.எஸ்.தாக்குர் சமீபத்தில் உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 18-ம் தேதி நடந்த தேசிய மக்கள் நீதி மன்றத்தில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பநல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. தமிழகம் முழு வதும் 253 அமர்வுகளாக நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 5,302 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 323 தம்பதியர் தாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
தேசிய மக்கள் நீதிமன் றத்துக்கு வந்த தம்பதியரில் 709 பேர் தனிக்குடித்தனத்துக்கு வீடு பார்க்க 3 மாதம் வரை அவ காசம் கேட்டுள்ளனர். அதனால் இந்த வழக்குகள் வரும் ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளன.
மொத்தத்தில் 1000 தம்பதி யர் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பது தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. குடும்பநல வழக்குகளை முடித் துக்கொள்ள தம்பதியர் ஆர்வத் துடன் முன்வருவதாலும், குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வழக்குகளை (சென்னை யில் மட்டும் 17,942) விரைந்து முடிக்க திங்கள், செவ்வாய், புதன் என வாரத்தில் 3 நாட்க ளுக்கு குடும்பநல வழக்கு களை விசாரிக்க திட்ட மிடப்பட்டுள் ளது. இதன்மூலம் குடும்பநல நீதிமன்றங்களில் 10 முதல் 15 சதவீதம் வரை பணிப்பளு குறையும் என்று கருதப்படுகிறது.