

தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 15-ம் தேதி முதல் இணைய தளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும், திருநங்கை களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் எனவும் பல்கலைகழகத் துணைவேந்தர் கே.ராமசாமி தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:
கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 7 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 13 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற் றுக்கான 2015-16 கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை தொடங் கப்பட உள்ளது.
வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் செயல் படும் உறுப்பு மற்றும் இணைப் புக் கல்லூரிகளில் உள்ள 13 இளம் அறிவியல் மற்றும் இளம் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக் கான 2,300 இடங்களுக்கு சேர்க்கை விண்ணப்பங்கள் இணைய தளம் மூலமாக மே 15-ம் தேதி முதல் பெறப்பட உள்ளன. ஜூன் 13-ம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். ஜூன் 20-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப் படும். ஜூன் 29-ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வும், ஜூலை 15-ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்படும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இந்த ஆண்டு முதல் திருநங்கை களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். ஜம்மு காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடப் பிரிவிலும் இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும்.
இந்த ஆண்டு முதல் மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்) என்ற 4 ஆண்டு இளங்கலை பட்டபடிப்பு மாற்றப்பட்டு உணவு அறிவியல் (ஃபுட் சயின்ஸ்) என்ற பாடப் பிரிவும், ஊட்டத்சத்து (நியூட்ரீசியன்) என்ற பாடப் பிரிவும் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் உணவு அறிவியல் என்ற பாடப் பிரிவும், ஊட்டத்சத்து என்ற பாடப் பிரிவும் அறிமுகம் செய்யப்படுகிறது.