

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 8-ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த செய்தி, நாளிதழ் களில் மறுநாள் வெளியானது. இப்பேட்டி தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கில், அவரது பேட்டியை வெளியிட்ட, ‘தி இந்து’ தமிழ் நாளிதழும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.