Published : 03 May 2014 08:16 AM
Last Updated : 03 May 2014 08:16 AM

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்: அண்ணா பல்கலை. உள்பட 59 மையங்களில் பெறலாம்

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 59 மையங் களில் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஏராளமான சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக். இடங்களும், தனியார் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு வரும் இடங்களும் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

2 லட்சம் இடங்கள்

இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. பொறியி யல் கலந்தாய்வு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன. விண்ணப்பம் விலை ரூ.500. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.250. கட்டணச் சலுகை பெற அவர்கள் சாதிச் சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப் பக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தலாம்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 59 மையங்களில் விண்ணப்பங்களை விற்பனை செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மையங்கள் மற்றும் இதர விவரங்களை www.annauniv.edu/tnea2014 என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்கள் தவிர தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

தபாலிலும் பெறலாம்

வெளியூர் மாணவர்கள் தபால் மூலம் விண்ணப்பம் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 (எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.450). விண்ணப்பக் கட்டணத்தை ‘The Secretary, Tamil Nadu Engineering Admissions (TNEA), Anna University, Chennai 600025’ என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து “செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-25” என்ற முகவரிக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

கடைசி நாள் மே 20

விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் கடைசி நாள் மே 20-ம் தேதி. ரேங்க் பட்டியல், கலந்தாய்வு குறித்த தகவலும், பி.ஆர்க். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை.யில் ஏற்பாடு

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் பல்வேறு மையங்களில் விநியோகிக்கப்பட் டாலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோருடன் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதைக் கருத்தில் கொண்டு, ஏராளமான கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல, கலந்தாய்வுக்கு வரும் வெளியூர் மாணவர்கள், பெற்றோர் ஓய்வெடுக்க ராட்சத கூடாரம் அமைக்கும் பணியும் வெள்ளிக் கிழமை முழுவீச்சில் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x