Published : 14 Apr 2015 11:08 AM
Last Updated : 14 Apr 2015 11:08 AM

தமிழகம் வந்தது கிருஷ்ணா நதி நீர் இன்று காலை பூண்டி ஏரியை வந்தடையும்

ஆந்திர மாநிலத்தின் கண்டலேறு அணையில் இருந்து, பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், நேற்று பிற்பகல் தமிழக எல்லைக்குள் புகுந்தது.

சென்னையின் குடிநீர் தேவைக் காக தமிழகம்- ஆந்திரம் இடையே 1983-ல் நிறைவேற்றப்பட்ட தெலுங்கு- கங்கை ஒப்பந்தத்தின் படி, ஆண்டுதோறும் கிருஷ்ணா நதி நீரை ஆந்திரம் தமிழகத்துக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த மாதம் 20-ம் தேதி வரையிலான காலத்தில் 4.751 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை ஆந்திரம் வழங்கியுள்ளது. கடந்த மாதம் 20-ம் தேதிக்குப் பிறகு, கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு வருவது நிறுத்தப்பட்டது.

இதனிடையே, மொத்தம் 11,057 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், நீர் இருப்பு குறையத் தொடங்கியது. நேற்றைய நிலவரப் படி, இந்த ஏரிகளில் 2, 245.50 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

எனவே, கடந்த மாதம் 31-ம் தேதி தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், கிருஷ்ணா நதி நீர் கேட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, கடந்த 2-ம் தேதி தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திரத்துக்குச் சென்று அம்மாநில அரசு அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழக முதல்வரின் கடிதம் மற்றும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் பேச்சு வார்த்தை ஆகியவற்றின் விளை வாக கடந்த 10 -ம் தேதி கண்ட லேறு அணைலிருந்து வினாடிக்கு 1,600 கன அடி வீதம் கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.

இந்த நீர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தமிழக எல்லை யான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் தாம ரைக்குப்பம் கிராமத்தில் உள்ள ‘ஜீரோ பாயிண்ட்டை’ வந்தடைந் தது. ‘ஜீரோ பாயிண்ட்’டுக்குள் வினாடிக்கு 72.70 கன அடி வீதம் வந்த கிருஷ்ணா நதி நீர் வரத்து, 2.30 மணியளவில் வினாடிக்கு 156.43 கன அடியாக இருந்தது. ‘ஜீரோ பாயிண்ட்’-லிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள பூண்டி ஏரியை இன்று காலை கிருஷ்ணா நதி நீர் வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘ஜீரோ பாயிண்ட்’டுக்குள் வினாடிக்கு 72.70 கன அடி வீதம் வந்த கிருஷ்ணா நதி நீர் வரத்து, 2.30 மணியளவில் வினாடிக்கு 156.43 கன அடியாக உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x