ஊரப்பாக்கத்தில் வணிகர் தினத்தையொட்டி மே 5-ல் வணிக விரோத சட்ட எதிர்ப்பு மாநாடு: வணிகர் சங்க பேரமைப்புகளின் தலைவர் அறிவிப்பு

ஊரப்பாக்கத்தில் வணிகர் தினத்தையொட்டி மே 5-ல் வணிக விரோத சட்ட எதிர்ப்பு மாநாடு: வணிகர் சங்க பேரமைப்புகளின் தலைவர் அறிவிப்பு
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ் சேரியை அடுத்த ஊரப்பாக்கத்தில் மே 5-ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வணிகர் சங்க மாநாடு, வணிக விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநாடாக அமை யும் என்றார் வணிகர் சங்க பேரமைப்புகளின் தலைவர் விக்கிரமராஜா.

ஊரப்பாக்கத்தில் நேற்று மாநாட்டு பந்தல் கால்கோள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, விக்கிரமராஜா கூறியதாவது:

ஆண்டுதோறும் வணிகர் தினத்தையொட்டி அமைப்பின் மாநில மாநாட்டை நடத்தி வருகி றோம். அதன்படி, நிகழாண்டு ஊரப்பாக்கத்தில் மாநாட்டை நடத்தவுள்ளோம். வணிகர்களிடம் வரி வசூலிப்பதற்காக வணிக வரித் துறை ஏற்படுத்தியுள்ள சட்டங்கள் அனைத்தும் வணிக விரோத சட்டங்களாக உள்ளன.

மேலும், வணிகர்களிடம் உத்தேச வரி வசூலிப்பில் வணிக வரித்துறையினர் ஈடுபடுகின்றனர். இதனால், வணிகர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகின் றனர். இதன் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் அதிக எண்ணிக் கையில் வழக்குகள் பதிவாகி வருகின்றன.

உத்தேச வரி வசூலிப்பை வணிக வரித்துறை அதிகாரிகள் தவறான முறையில் செயல்படுத்தி வருகின்றனர்.

எனவே, நிகழாண்டு நடைபெற வுள்ள அமைப்பின் மாநில மாநாடு, வணிக விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநாடாக அமைய உள்ளது.

இதில், வணிக விரோத சட்டங்களை கண்டித்தும் மற்றும் சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப் படும் கட்டணத்தால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

புதுச்சேரி மாநில வணிகர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதால், 2 லட்சத்துக்கும் அதிக மான வணிகர்கள் அமரும் வகையில் மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in