

கடலூர் தேமுதிக வேட்பாளராக சி.ஆர்.ஜெய்சங்கர் என்பவரை தேமுதிக தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.
கடலூர் தேமுதிக வேட்பாளராக ராமானுஜம் என்பவர் ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் திட்டக் குடி வட்டம் முருகன்குடி என்ற போதிலும், இவர் சென்னை ஆவடியில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். எனவே தொகுதியில் போதிய அறிமுக இல்லாத நபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்டத்தில் மேற்கொள் ள இருந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த செய்தியை புதன்கிழமை ‘தி.இந்து’வில் வேட்பாளர் மாற்றப்படக் கூடும் என்பதால் விஜயகாந்தின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல நிதிநிறுவன அதிபரை வேட்பாளராகத் தேர்வு செய்தி ருப்பதாக செய்தி வெளி யிடப்பட்டிருந்தது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் வியாழக்கிழமை கடலூர் தொகுதி வேட்பாளராக சி.ஆர்.ஜெய்சங்கர் என்பவரை தேமுதிக தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நெய்வேலியை சொந்த ஊராகக் கொண்ட சி.ஆர்.ஜெயசங்கர், எம்பிஏ பட்டதாரி. இவரது தந்தை ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியர். 43 வயதாகும் ஜெயசங்கர் நிதி நிறுவனம், திரையரங்கு, ஹோட்டல் மற்றும் ரியல்எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.மனைவி பெயர் அனிதா.
ஜெய் நிதீஷ் என்ற மகனும் மற்றும் ஜெய் நிதீஷா என்ற மகளும் உள்ளனர். தொடக்கத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகராக இருந்து, பின்னர் அவரது அரசியலைத் தொடர்ந்து கட்சி உறுப்பினராகி இருந்து வருகிறார்.