

நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவிட காஞ்சி மடம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது என்று காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து காஞ்சி மடாதிபதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டுக்கு பிறகு புதுச்சேரி அரசின் விருந்தினர் பட்டியலில் காஞ்சி மடாதிபதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி வந்த இருவருக்கும் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒதியம் பட்டு கிராமத்தில் உள்ள சங்கர வித்யாஸ்ரம பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயேந்திரர், நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட் டவர்களுக்கு உதவிட காஞ்சி மடம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. பக்தர்களும் இதுபோன்ற தர்ம காரியங்களுக்கு நிதி தர வேண்டும் என்றார்.
இந்நிலையில் புதுச்சேரி வந்த காஞ்சி மடாதிபதிகளுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக் கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் தமிழ் ஆதரவு அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.