கடற்கொள்ளையர்களால் சுடப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் உத்தரவு

கடற்கொள்ளையர்களால் சுடப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

பக்ரைனில் கடல் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்த கன்னியாகுமரி மீனவர் தாமஸ் கிளேட்டஸ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்: "பக்ரைன் நாட்டில் விசைப்படகு ஒன்றில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த ஏழு மீனவர்களில், கன்னியாகுமரி மாவட்டம், ராஜக்கமங்கலம் துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் தாமஸ் கிளேட்டஸ் என்பவர் கடந்த 21-ம் தேதி கடல் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இத்துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த மீனவர் தாமஸ் கிளேட்டஸ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த செய்தி குறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக பக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, இறந்த மீனவர் தாமஸ் கிளேட்டஸ் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கால்நடை பராமரிப்பு, பால்வளம்

மற்றும் மீன்வளத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் தாமஸ் கிளேட்டஸ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in