Published : 27 Apr 2015 08:35 AM
Last Updated : 27 Apr 2015 08:35 AM

விவசாயிகளின் நிலத்தைப் பறிப்பதுதான் பாஜக ஆட்சியின் குறிக்கோள்: மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு

விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிப்பதுதான் பாஜக ஆட்சியின் குறிக்கோளாக இருக்கிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

வேளாங்கண்ணியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

பிரதமர் மோடி வெளிநாடுக ளுக்கு செல்வது, அங்குள்ள பகாசுரக் கம்பெனிகளுக்கும் இங்குள்ள பெரு முதலாளி களுக்கும் விவசாயிகளின் நிலங்க ளைத் தாரை வார்ப்பதற்காகத்தான். 11 மாத பாஜக ஆட்சியில் விவசாயிகள், மக்கள் விரோத கொடிய சட்டங்கள்தான் நிறை வேற்றப்பட்டு வருகின்றன.

1995 முதல் நாடு முழுவதும் 2 லட்சத்து 97 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸும் பாஜகவும் பொறுப் பேற்க வேண்டும். ஒற்றுமையாக வாழும் இந்நாட்டு மக்களிடையே, மதவெறியை ஊட்டி, மதக் கலவரங் களை உருவாக்க முயல்கின்றனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை

4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஊழலும் கொலை, கொள்ளைகளும் மலிந்துள் ளன. கவுரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாகத் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

பணம் படைத்தவர்களே கல்விபெறும் நிலை வந்துவிட்டது. இதனால், 1,500 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், 2000 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. எனவே, அரசுப் பள்ளிகளை நாம் பாதுகாக்க வேண்டும். 100 நாள் வேலை பறிபோகும் நிலைமையை மோடி அரசு உருவாக்கி விட்டது.

இவற்றை எதிர்த்துப் போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மே 5 முதல் 15 வரை மாபெரும் இயக்கம் நடத்த உள்ளது. இந்த இயக் கத்துக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x