Published : 17 Apr 2015 08:27 AM
Last Updated : 17 Apr 2015 08:27 AM

திருவாரூர் மத்திய பல்கலை.யில் ஜூன் 6,7-ல் நுழைவுத் தேர்வு: இணையதளம் மூலம் மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில் உள்ள மத்திய பல் கலைக்கழகத்தில் 2015-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம், ஜார்க் கண்ட், கர்நாடகம் உள்ளிட்ட 8 மத்திய பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்தப் பொது நுழை வுத் தேர்வை நடத்த உள்ளன.

பொது நுழைவுத் தேர்வு ஜூன் 6, 7 ஆகிய 2 நாட்கள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திரு வாரூர் உட்பட இந்தியாவில் 39 மையங்களில் நடைபெற உள்ளன.

தேர்வெழுத விரும்பும் மாண வர்கள் இணையதளம் மூலம் மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி, ஸ்கேன் செய்த புகைப்படம் மற்றும் கையெழுத்து, மதிப் பெண் சதவீதம் ஆகியவற்றை இணையதளத்தில் விண்ணப் பிக்கும்போது அளிக்க வேண்டும். விண்ணப்பத்துக்கான கட்டணத்தையும் இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு (Integrated course) எம்.எஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், லைஃப் சயின்ஸ் பாடப் பிரிவுகளில் சேரலாம். இளநிலை பட்டம் முடித்த வர்களுக்கு எம்.ஏ. ஆங்கிலம், செம்மொழி தமிழ், ஹிந்தி, சமூகப் பணி(Social work), ஊடகம் மற்றும் தொடர்பியல் போன்ற பாடப் பிரிவுகளும் உள்ளன. மேலும், இந்த ஆண்டு எம்.டெக். பொருள் அறிவியல், நானோ தொழில் நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொழில் நுட்பம் (M.Tech Material science, Nano Technology, Energy and Environmentel Technology) படிப்புகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். பொது நுழைவுத் தேர்வுக்கான பாடத் திட்டம், செலுத்த வேண்டிய கட்டணம் பற்றிய விவரங்களை www.cucet2015.co.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20-ல் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு, பல்கலைக்கழக துணைப்பதிவாளரை 04366- 277261, 94890 54270 ஆகிய எண்களில் மற்றும் cucet2015@cutn.ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள லாம் என பல்கலைக்கழக பதி வாளர் (பொறுப்பு) பொன்.ரவீந்தி ரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x