

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.கருப்பையா நேற்று ஓய்வுபெற்றார். இதையடுத்து அவருக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி, நீதிபதி கருப்பையாவை பாராட்டி பேசினார்.
இவ்விழாவில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர்.கருப்பையா, 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியானார்.
நேற்று அவர் ஓய்வுபெற்றதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பணி யிடங்களின் எண்ணிக்கை 60. தற்போது 40 நீதிபதிகளே உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.