

தொலைக்காட்சிகளில் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று பெப்சி மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மறைந்த சின்னத்திரை இயக்கு நர் பாலாஜி யாதவின் நினைவஞ் சலிக் கூட்டம் தென்னிந்திய திரைப் பட தொழிலாளர் சம்மேளம் (பெப்சி) மற்றும் தமிழ்நாடு சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் நேற்று நடைபெற்றது. பெப்சி தலைவர் ஜி.சிவா, சின்னத் திரை நடிகர்கள் சங்கத்தலைவர் நளினி, தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் கவிதாபாரதி, இயக்குநர் சமுத்திரகனி, சின்னத்திரை தயாரிப்பாளர் குட்டிபத்மினி உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு பெப்சி மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “டப்பிங் சீரியல்கள் அதிகரிப்பால் வேலையிழந்த சின்னத்திரை இயக்குநர் பாலாஜி யாதவ் சமீபத் தில் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி வருவதால் சின்னத் திரையை நம்பி இருக்கும் கலைஞர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொலைக்காட்சி நிறுவனங்கள் டப்பிங் தொடர்களை நிறுத்திவிட்டு, நேரடித் தொடர்கள் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கித் தர வேண் டும். இல்லாவிட்டால் டப்பிங் தொடர் களை வெளியிடும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக போராட் டம் நடத்துவோம்” என்று கூறப் பட்டுள்ளது.